கோவை டிச:10
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்,இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை காண
கோவை,திருப்பூர், மதுரை,ராமநாதபுரம் பகுதிகளை சார்ந்த கியோகுஷின் கராத்தே பள்ளி சார்பாக 30க்கும் மேற்ப்பட்ட கராத்தே மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை கோவை வாகராயம்பாளையம் கராத்தே பயிற்சி ஆசிரியர் வடிவேல் அவர்களின் ஏற்பாட்டில் அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் கராத்தே அமைப்பு மூலம் மாணவர்களை இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது இதுவே முதல் முறையாகும்,
மாணவர்களின் திறனை மற்ற துறைகளிலும் சிறந்து விளங்கிட இது போன்ற நிகழ்வுகள் உறுதுணையாக இருக்கும் என்றனர். இதில் ராமநாதபுரம் சரவணகுமார், திருப்பூர் தங்கராஜ்,மதுரை வீரபிரகாஷ், உள்ளிட்ட கராத்தே ஆசிரியர்கள் உடனிருந்தனர்.