தேனி, மே. 18-
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டம் 2004 அடிப்படையில் உத்தமபாளையம் பகுதியில் விவாயிகளிடம் பயிற்சி பெறுவதுடன் நவீன விவசாயம் பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர் அவ்வகையில் கோம்பை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் கால்நடை உதவி மருத்துவர் திரு.ரா.சிவசக்தி மற்றும் கால்நடை ஆய்வாளர் திருமதி. ஜெனிதா அவர்கள் ரெங்கநாதபுரத்தின் கால்நடை தடுப்பூசி முகாம் நடத்துனர் ஆகியோர் கலந்து கொண்டனர் இம் முகாமிற்கு மண்டல இணை இயக்குநர் கோயில் ராஜா தலைமை வகித்தார் முகாமில் கால்நடைகளுக்கு பி.பி.ஆர் தடுப்பூசி செலுத்தி குறியிடுதல் நடத்தப்பட்டது உத்தமபாளையம் குழு மாணவிகள் சுஜாதா செளமியா இந்து பிரியா ஸ்வேதா சுவாதி ஸ்ரீ தேவி சோனா பினோஷ் நாக பிரக்னியா ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் குறியிடுதல் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதே தெரிந்து கொண்டனர் இம்முகாமிற்கு விவசாயிகள் தங்களது கால்நடையுடன் கலந்து கொண்டனர்.