இராமநாதபுரம் மாவட்டம் M.R.T Nagar இராமேஸ்வரத்தில் சிலம்பம் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கே . என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்கள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர்.
சிலம்பம் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 25 மாணவ , மாணவிகள் முதல் இடமும் , 20 மாணவர்கள் இரண்டாம் இடமும், 15 பேர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
மேலும் ஒட்டு மொத்த வெற்றி கோப்பையையும் கமுதி கே.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் சிலம்பம் பயிற்சியாளர் லட்சுமணன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியை மகேஸ்வரி , ஆசிரியர் தர்மராஜ் உள்ளிட்டோருக்கு பள்ளியின் நிர்வாகக் குழுவினர் , தலைமை ஆசிரியை ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.