இரணியல், நவ- 25
இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளிக்கு 14 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவி தனது வீட்டு அருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் முகம் கழுவ சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் சிறுமியின் தாயார் வெளியே சென்று பார்த்தபோது, மாணவி அழுது கொண்டிருந்ததை கண்டு மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ட28) என்பவர் அங்கு வந்து திடீரென தன்னை தூக்கிச் சென்று தண்ணீர் தொட்டி அருகே உள்ள பகுதியில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.
இதை கேட்ட மாணவியன் தாயார் உடனே குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.