மார்த்தாண்டம், டிச 5
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண் ஒருவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வருகின்றார். இந்த பெண்ணின் 15 வயது மகள் பக்கத்து ஊரில் உள்ளவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் முளகுமூடு பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பிய கூலி தொழிலாளி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு அறிமுகமாகி காதலித்து உள்ளனர். சம்பவ தினம் மதியம் மாணவியை கோடியூர் பகுதியில் உள்ள ஒரு சர்ச் அருகில் வரக் கூறியுள்ளார். சர்ச் அருகில் வந்ததும் மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல் நடித்து கழுத்தில் கிடந்த நான்கு பவுன் எடையை உள்ள செயினை வாலிபர் கழற்றி விட்டாராம்.
மாணவி செயின் தொடர்பாக கேட்டவுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து செயினுடன் புறப்பட்டு சென்று விட்டார். இது சம்பந்தமாக மாணவி தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அந்த 18 வயது தொழிலாளி மீது போக்சோ பிரிவுகளில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.