கொல்லங்கோடு, செப்- 24
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு அருகே ஊரம்பு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் இருந்து 4 சாலைகள் பிரிந்து செல்கின்றன. இது தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கியமான பகுதியாகும். இதனால் எப்பொழுதும் வாகன நெருக்கம் அதிகமாக காணப்படும்.
மேலும் இந்த பகுதியில் தினசரி சந்தை மற்றும் வணிக வளாகம் அதிகமாக காணப்படுவதாலும் காலை முதல் இரவு வரையிலும் எப்போதும் வாகன நெருக்கடி அதிகமாக இருக்கும். இதனால் இந்தப் பகுதியில் காலை முதல் மாலை வரையிலும் பல நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து காணப்படுகிறது.
இதனால் அந்த வழியாக அவசர தேவைகளுக்கு மற்றும் மருத்துவமனை போன்றவர்களுக்கு செல்வோர்களின் வாகனங்கள் இந்த நெரிசலில் சிக்கி பயணிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.
ஆகவே ஊரம்பு சந்திப்பு பகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி இரவு வரையில் போக்குவரத்தை சரி செய்ய கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திலிருந்து போலீசாரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.