ஊட்டி.டிச.17.
நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி அளிக்காமல் நீண்ட காலமாக தாமதப்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டிட அனுமதி குறித்த நமது வாழ்வாதாரப் போராட்டத்தை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லுகிற விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பொறியாளர்கள் சேர்ந்து கண்டன பதாகைகளை ஏந்தி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் தனது நியாயமான கோரிக்கைகளை நேரடியாக விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினர். பொதுமக்களையும், கட்டுமான துறையை நம்பி பிழைக்கும் பலதரப்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து பாதக்ஐப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 11% கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் குறிப்பாக எம்சாண்ட், ஜல்லி போன்ற பொருட்களின் தொடர்ச்சியான விளையேற்றத்தால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நீண்ட அனுமதியின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டு மாவட்ட சுற்றுச்சூழல் காரணத்தை மட்டும் காரணம் காட்டி அனுமதிக்கு காலம் தாழ்த்தி வரும் மாவட்ட நிர்வாகம் கூறும் காரணங்களால் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களின் கோரிக்கை வைக்க முடியாமல் தவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதியை ஏழை நடுத்தர மக்களுக்கு ஒரு நீதியும் என்ற பாகுபாட்டால் சாதாரண மக்களின் கட்டிட அனுமதி மறுப்பால் பொறியாளர்கள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். மேலும் இதனால் மாவட்ட பொருளாதாரம் செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான வரைமுறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வீடு, கட்டிடம் போன்றவைகளுக்கு முறையான அனுமதி வழங்காதது பாதிப்பை ஏற்படுத்துவதாக பொறியாளர்கள் தெரிவித்தனர். மேலும் மற்ற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் உடனே அனுமதி அளிக்கின்ற நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் மூன்று வருடங்களுக்கு மேலாக காலதாமதப்படுத்தி அலைகழிக்கும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினர் ஆட்சியரகத்தில் அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட பொறியாளர்கள் நில உரிமையாளர்கள் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி கட்டிட அனுமதிக்கு உள்ள தடைகளை நீக்கி கட்டிட வரைமுறை சட்டப்படி விரைவான அனுமதி அளிக்க நீலகிரி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.