நாகர்கோவில் டிச 5
பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது.இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர் .மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகர்கோவில் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். இரவு ரோந்து பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அஞ்சுகிராமம் ஆரல்வாய்மொழி களியக்காவிளை சோதனை சாவடிகளில் போலீசார் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து வருகிறார்கள். நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் மெட்டல்டிரைக்டர் கருவின் மூலம் இன்று சோதனை மேற்கொண்டனர்.மோப்பநாய் உதவியுடன் அங்குள்ள பார்சல்கள் சோதனை செய்யப்பட்டது. தண்டவாளர்களிலும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகிறார்கள். பிளாட்பாரங்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது சுற்றி வருகிறார்கள் என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில்வே பிளாட்பாரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து வெளியூருக்கு அனுப்பபடும் பார்சல்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது.ரயில்களிலும் போலீசார் ரோந்துபணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரி ரயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். பயணிகளின் உடைமைகளையும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். நாங்குநேரி குழித்துறை இரணியல் மார்த்தாண்டம் ரயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. கோயில்களிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். சுசீந்திரம் தாணுமாலை சாமி கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவட்டாறு ஆதிகேச பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.