தஞ்சாவூர். டிச.19.
ஐ எஸ் ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
வீட்டு உபயோக மின் சாதனங் களான வாஷிங் மெஷின் ,மின்சார சமையல் பாத்திரம், நீர் சூடேற்றம் பாத்திரம், தேநீர் தயாரிப்பு பாத்திரம், அரவை எந்திரம், முடி உலர்த்தும் எந்திரம் போன்றவை களை மத்திய அரசு வீட்டு உபயோக மின் சாதனங்கள் தர கட்டுப்பாட்டு ஆணை 1981ன் படி தரக்கட்டுப்பாடு சான்றிதழ் உள்ளவைகளை தயாரிக்கவும், விற்பனை செய்ய வும் வேண்டும். மத்திய அரசு தரச் சான்றிதழ் இல்லாமல் உற்பத்தி செய்யவோ, இருப்பில் வைத்திருப்பதோ, விற்பனை செய்யவோ கூடாது
தரமற்ற வீட்டு உபயோக சாதனங்களை பயன்படுத்தும் போது மின் விபத்து காரணமாக இழப்புகள் ஏற்படுவதால், அவ்வாறு தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனைசெய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .மேலும் ஐ.எஸ்.ஐ தரச்சான்று இல்லாத வாட்டர் ஹீட்டர், மின் இஸ்திரிப் பெட்டி ,மின்சார அடுப்பு, எலக்ட்ரிக் பொருட்கள் மற்றும் மின் உபகரண ங்கள் ஆகியவற்றை தயாரிப்ப தையும், விற்பனைசெய்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்பு இன்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும் .ஆய்வின் போது உற்பத்தி மற்றும் விற்பனை யாளர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கவும் ,சேகரிக்ககப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் நிர்ணயிக்கப்பட்ட தரஆய்வின்படி இல்லாத மின்சாதனப் பொருட்க ளை பறிமுதல் செய்யவும், மாவட்ட தொழில் மைய பொது மேலாளரு க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர பதிவு கள் மேற்கொள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுக வேண்டும். இரும்பு தகடுகள், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப் படும் இரும்பு கம்பிகள் மட்டுமின்றி துருப்பிடிக்காத எக்கு பொருள் களும் தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். தரம் குறைந்த பொருள் கள் தயாரிப்பதும், விற்பனை செய்வதும் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அதில்கூறப்பட்டுள்ளது.