ஈரோடு ஜன 5
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரிலும் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் செயல்பட்டு வரும் வெல்லம் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ் செல்வன் அருண்குமார் சதீஷ்குமார் எழில்
தன்பியா பானு ஸ்ரீதேவி பிரியா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அங்கு நடைபெற்ற ஏலத்தில் பங்கு பெற்ற வியாபாரிகள் முன்னிலையில் வெல்லம் மற்றும் சர்க்கரையில் மேற்கொள்ளப்படும் கலப்படங்கள் குறித்தும் அதனால் பொது மக்களின் உடல் நலனுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அங்கு வெல்லம் மற்றும் சர்க்கரை இருப்பில் வைக்கப்பட்டிருந்த குடோன்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மாவட்டம் முழுவதும் வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்தி இடங்கள் சேமித்து வைக்கும் இடங்கள் மொத்த வியாபாரம் சில்லறை வியாபாரம் மேற்கொள்ளப்படும் இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் வெல்லம் மற்றும் சர்க்கரையில் கலப்படம் கண்டறியப்பட்டாலோ உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் வணிகம் செய்வது கண்டறியப்பட்டாலோ உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டமத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்தார்.