தஞ்சாவூர்.ஜூலை 30.
தஞ்சாவூரில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோர் உருவ சிலையுடன் வீதி உலா நடை பெற்றது.
முன்னதாக,மேல வீதியில் உள்ள ராஜராஜன் சமய சங்கத்தில் நால்வரின் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நால்வரின் சிலைகள் வைக்கப் பட்டு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்கா வலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பன்னிரு திருமுறைகள் தலையில் சுமந்தபடி வீதி உலா வந்தனர்.
வீதி உலா அபிஷேக ஆராதனைக ளை சிவனடியார் ஆறுமுகம் செய்தார். ஊர்வலம் மேலவீதி தொடங்கி வடக்கு வீதி கீழ ராஜவீதி தெற்கு வீதி வழியாக மீண்டும் மேல வீதியில் புறப்பட்ட இடத்தை சென்றடைந்தது .ஏராளமான சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.