நாகர்கோவில் அக் 24
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஒன்றிய பாஜக அரசின் பாசிச சித்தாந்தங்களை முறியடித்து ஜனநாயகத்தை காக்கும் அரசியல் விளக்க தெருமுனை கூட்டம் இறச்சகுளம் சந்திப்பில் இளைஞர் காங்கி்ரஸ் மாவட்ட தலைவர் டைசன் தலைமையில், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரண்ஸ்,மாநகர மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் ,நட்சத்திர பேச்சாளர் அந்தோணி முத்து , திங்கள் சந்தை பேரூராட்சி தலைவர் சுமன் ,இளைஞர் காங்கிரஸ் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல் , கண்ணூர் பேரூர் காங்கிரஸ் தலைவர் ஜோண், ஆத்திவிளை இளைஞர் காங்கிரஸ் தலைவர் லிபின் , இளைஞர் காங்கிரஸ் சாம் சுந்தர் ,தியாகி தவசி முத்து , பாடலிங்கம் , மாநில பேச்சாளர் சுஜின்,இளைஞர் காங்கிரஸ் பிரேம் மதன், பிரபு,,உட்பட பலர் கலந்து கொண்டனர்.