தி மு க அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்ட அமைச்சர்
அமைச்சர் முத்துசாமி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி மு க வேட்பாளர் சந்திர குமாரை ஆதரித்து ஈரோடு 52 மற்றும் 53 வது வார்டுகளுக்கு உட்பட்ட காளை மாடு சிலை ,ஈஸ்வரன் வீதி,பால சுப்பராயலு வீதி,அண்ணா மலை வீதி, கக்கன் தோட்டம், நேதாஜி வீதி உள்பட பல்வேறு வீதிகளில் தி மு க அரசின் சாதனைகளை கூறி உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். இதில் கவுன்சிலர் சாந்தி பாலாஜி மாவட்ட திமுக மகளிர் அணி செயலாளர் திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.