தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் மாநில துணைத் தலைவர் வி.மாரி தலைமையிலும் மாநில துணைச் செயலாளர்கள்
செந்தில் மற்றும் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத் தலைவர் சுருளிப்பாண்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் டி கிரேடு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் வட்டத்தலைவர் அரியதாஸ் பொருளாளர் கணேசன் வட்டச் செயலாளர் சுந்தர் உள்ளிட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.