தென்தாமரைக்குளம் ஏப் 16
தென்தாமரைகுளம் அடுத்த ஆண்டிவிளையில் சிவசக்தி வாலிபால் கிளப் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடக்கிறது.
இரண்டாம் நாளான நேற்று மகளிர் பிரிவில் நடைபெற்ற போட்டியினை நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் தீபக் சாலமோன், செயலாளர் மைக்கிள் எடில்பெர்ட்,கிளப் தலைவர் ஆதி உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபருக்கு வாலிபால் கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.