நாகர்கோவில் அக் 27
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்து தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
உலக மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2024 அன்று
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள்
மற்றும் நிறுவனங்கள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
அதன்படி
மாற்றுத்திறனாளிகளில் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்களுக்கு மாநில
அளவில் 10 விருதுகளும், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறைபுடையோருக்கு
கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்குக்கான ஹெலன் கெல்லர் விருது,
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பொதுக்
கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை
ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியோருக்கு தலா 2
விருதுகளும், சிறந்த ஆசிரியர் (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பித்தல்), சிறந்த
சமூகப் பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு
நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம்,
ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடையோருக்கு
கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் ஆகியோருக்கு தலா 1 விருதுகளும் வழங்கப்படும். விருது
ஒன்றுக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது
என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்காணும் விருதுகளுக்கு https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கும் விருதாளர்கள், 28.10.2024 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 28.10.2024 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறும்
அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.