கன்னியாகுமரி, டிச. 3
நேச்சுரல் மென்ஸ் பிசிக்ஸ் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் அஞ்சுகிராமம் வின்னர் ஜிம்,கோல்டன் ஜிம் சார்பில் நேற்று கன்னியாகுமரியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
60,65,70 உள்ளிட்ட பல்வேறு எடை பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, கடலூர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உட்பட மாநிலம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டிக்கான ஏற்பாட்டினை நேச்சுரல் மென்ஸ் பிசிக்ஸ் பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் கன்னியாகுமரி மாவட்ட உறுப்பினர்கள் பிரதீப், ராமஜெயம், வனீஷ், ராகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.