ராமநாதபுரம், அக்.28-
தொண்டி ரேலி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு இறகுப்பந்து போட்டி மாநில அளவில் நவம்பர் 3 ம் தேதி நடைபெற உள்ளது.
தொண்டி ரேலி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி அளவில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப், தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இறகு பந்து போட்டி நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு இறகு பந்து போட்டி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 7 மணி அளவில் பரிசளிப்பு விழா தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் மாவட்ட இறகு பந்து கழக துணைத் தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற உள்ளது. தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் பெரியசாமி வரவேற்புரை ஆற்ற உள்ளார். ரேலி ஸ்போர்ட்ஸ் கிளப் உரிமையாளர் ரஹ்மத்துல்லா, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பதுல்லா, இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் எல்.ஆர்.சி. ராஜசேகர், தொண்டி பங்கு தந்தை வியாகுல அமிர்தராஜ், பாரத் பவர் ஜிம் ஆனந்தன், முகம்மது பைசல், ரேலி ஸ்போர்ட்ஸ் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் இராம ,கருமாணிக்கம்,அவர்கள் திருவாடனை ஒன்றிய பெருந்தலைவர் முகமது முத்தார் திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், தொண்டி இன்ஸ்பெக்டர் சௌந்தர பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஸ், திமுக திருவாடானை தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி செல்வி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்துராக்கு, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர். இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பொறியாளர் அபூபக்கர், அல்ஹிலால் பள்ளி தாளாளர் அப்துல் ரவுப் நிஸ்தார், வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப் கான், தொண்டி பைத்துல் மால் தலைவர் செய்யது அலி, ஆகியோர் வாழ்த்துரை வழக்க உள்ளனர். தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் காதர் நன்றி கூற உள்ளார். மாநில அளவில் நடைபெறும் இறகு பந்து போட்டியில் முதல் பரிசாக 15 ஆயிரம் இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க உள்ளனர்.
இறகு பந்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாட்சா 94423 20875 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.