திருச்செந்தூர் ஜூலை 15
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான காமராஜர்
போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் வேலாயுதப் பெருமாள் முன்னிலையில்
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் மற்றும் விமன் சேவா டிரஸ்டின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது
தொழிலதிபர் மார்க்கெட் கவாஸ்கர் துணை தலைவர் அருணாசலம் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் தொண்டு இயக்க தலைவர் விஜய் ஆனந்த் விழா ஒருங்கிணைப்பாளர் கோடிஸ்வரன்
காமராஜர் பேச்சு போட்டி ஒருங்கிணைப்பாளர் அவனிமாடசாமி சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மெர்கண்டில் வங்கி மூத்த மேலாளர் ராம்குமார் மற்றும் ராஜபாண்டி நாடார் முன்னேற்ற சங்கம் சதீஸ்குமார் பாண்டியனார் தொழிற்சங்க செயலாளர் சித்திர விஜயன் நாடார் முன்னேற்ற சங்க பொருளாளர் பழனி ஈஸ்வரன் கலாம் சட்ட வழக்கறிஞர் பிரகாஷ் உதவியாளர் ஷேக் முஹம்மது தமிழக மாணவர் இயக்கம் உட்பட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
விழா நிறைவில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.