தென் தாமரை குளம்., நவ. 7.
குமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு சக்தி கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி முகிலன்குடியிருப்பு சக்தி மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.இதில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான 19-வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபெற்ற சிறந்த 12 கைப்பந்து அணிகள் கலந்து கொண்டன. மூன்றாவது நாள் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு முகிலன் குடியிருப்பு ஊர்தலைவர் ஆர்.எஸ். பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சக்தி கைப்பந்து கழக செயலாளர் செல்லசிவலிங்கம், பொருளாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாமிதோப்பு தலைமை பதி குரு பால ஜனாதிபதி,சாமிதோப்பு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் செயலாளர் சத்திய சேகர், முன்னாள் இந்திய கைப்பந்து வீரர் சிவராஜன், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் கைப்பந்து பயிற்சியாளர் பழத்துரை, தேனி மாவட்ட கைப்பந்து பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு முன்னாள் கைப்பந்து வீரர் அய்யாதுரை, தொழிலதிபர் பிரதீப் சந்துரு, பேராசிரியர் டி சி மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் மூன்றாவது நாள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசுபெற்ற முகிலன் குடியிருப்பு சக்தி வாலிபால் கிளப்க்கு கோப்பை மற்றும் ரூ 15,000 ரொக்க தொகையும் ,இரண்டாவது பரிசுபெற்ற விளாத்தி விளை சீபன் பிரெண்ட்ஸ் வாலிபால் கிளப்க்கு கோப்பை மற்றும் ரூ. 12,000 ரொக்கத்தொகையும் , மூன்றாவது பரிசுபெற்ற தாமரைக்குளம் தாமரை வாலிபால் கிளப்க்கு கோப்பை மற்றும் ரூ. 10,000, ரொக்க தொகையும்,நான்காவது பரிசுபெற்ற விளாத்தி விளை சீபன் பிரெண்ட்ஸ் வாலிபால் கிளப் பி அணியினருக்கு கோப்பை மற்றும் ரூ. 8000 ரொக்க தொகை மற்றும் சிறந்தவீரர்களுக்கான ஊக்கப் பரிசுகளையும் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ், குமார் வழங்கினார்.
முன்னதாக நடைபெற்ற போட்டியை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செயலாளர் ராஜன் தொடங்கி வைத்தார்