சிவகங்கை:ஜன:29
சிவகங்கை மாவட்டம் அரசனூர் பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா டேக்வாண்டா
2024- 2025 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் விழா நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறையின், சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், டேக்வாண்டோ போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வமணி, பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி இயக்குனர் வரதராஜன் , திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏனாதி கடம்பசாமி, அரசனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி அய்யப்பன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி மாவட்ட உயர் கல்வி அலுவலர் கார்த்திகேயன் ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.