தென் தாமரைக் குளம்., நவ. 27.
மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் முட்டம் கடற்கரையில் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெற்ற போட்டியில் 21 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் திருவட்டாறு அருணாச்சலம் மேல்நிலைப் பள்ளி அணியுடன் மோதிய தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி அணியினர் முதல் இடத்தை பெற்றனர். இதன் மூலம் மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிக்கு மாணவர்கள் செல்வ ஆகாஷ் மற்றும் வினிஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கால்வின், பள்ளி தலைமை ஆசிரியை பிரீத்தா ரிச்சர்ட், பயிற்சியாளர்கள் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெகன் குமார், தீயணைப்புத்துறை வீரர் அசோக் குமார், கிராம நிர்வாக அலுவலர் சுதன், கண்ணன், அருண், பவித்ரா மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர்.