சங்கரன்கோவில். அக்.13.
பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டு பேர் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவிகள் சந்தியா, யோகதர்ஷினி ஆகியோர் பங்கேற்று முதலிடம் பெற்றனர். இவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சியளிக்கப்படும் என, விளையாட்டுக் குழும நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது யோகா ஆசிரியர்கள் தென்காசி மாவட்ட கராத்தே அசோசியேசன் தலைவர் சிவபிரகாஷ், திருநெல்வேலி அரசு மாடல் பள்ளி பயிற்சியாளர் சங்கீதா, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.