குரும்பூர், ஜூலை 26- தூத்துக்குடி மாவட்டம்
குரும்பூரில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று முன்தினம் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் புதிய வணிகர் சங்கங்கள் பேரமைப்புடன் இணைப்பு ஆகிய முப்பெரும் விழா
மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில் தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோரின் முன்னிலையில்
நடைபெற்றது.
இந்த விழாவில்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா திருவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து பேசினார். முன்னதாக குரும்பூர் பஜாரில் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகளை பதவி நியமனம் செய்து வைத்தார். நிறைவாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் அருணாசலம் நன்றி கூறினார். இதில் ஏராளமான வியாபாரப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதலமைச்சர் 9 ஆண்டு காலம் முறையாக இருந்த உள்ளாட்சி நகராட்சி கடைகளை மீண்டும் 12 ஆண்டுகளாக உயர்த்தி தந்துள்ளார். அதேபோல் ஆண்டு தோறும் எடுக்கும் லைசன்ஸ் முறையை 3 ஆண்டுகளுக்கு ஒரு லைசன்ஸ் முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கு வணிகர் பேரவை சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் அதேபோல் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம் இதே கோரிக்கையை பிரதமர் மோடியிடமும் வலியுறுத்தி உள்ளோம் கார்பரேட் கம்பெனியின் ஆன்லைன் வர்த்தகம் சாமானிய வணிகம் துடைத்து எறிகின்ற ஆபத்து நெருங்கி கொண்டிருக்கிறது. அதிலிருந்து எங்களை காப்பதற்கு சிறப்பு சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த இருக்கிறோம்
மேலும் வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளோம் புகையிலை உற்பத்தியை தடை செய்தால்தான் கடைகளில் கிடைக்காது. ஆனால் கடைகளை சீல் வைப்பது மிக அநீதியான செயலாக உள்ளது. அதேபோல் அதிகப்படியாக அபராதம் விதிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சாமானிய மனிதர்களின் பொருளாதார நிலைமையை அறிந்து அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.