கன்னியாகுமரி செப் 6
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
உலக ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஒரு ஆசிரியர் ஒரு தத்துவஞானி மற்றும் வழிகாட்டியாக நம் கைகளைப் பிடித்து, நம் தவறுகளைத் திருத்தி, நம்மை சிறந்த குடிமக்களாக மாற்றுகிறார். நமது வாழ்க்கையில் ஆசிரியரின் பங்களிப்பு விலை மதிப்பற்றது. உலகின் பல நாடுகளில், ஆசிரியர் தினம் என்பது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களை கௌரவிக்கும் ஒரு சிறப்பு நாளாகும்.
ஆசிரியர் தினம் என்பது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மகத்தான பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின்
அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு அளிக்கும் அங்கீகாரம் மட்டுமல்லாமல், ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் குடியரசு தலைவராக உயர்ந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூருகிறது.
தனிநபர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தின் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இதை நினைவூட்டும் வகையில், ஆசிரியர் தினத்தன்று, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்கள். நானும் கல்வி எனும் அழியா செல்வத்தை கற்று தரும் ஆசிரியர் பெருமக்களை இந்நாளில் நினைவுகூர்ந்து, அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.