ஈரோடு ஜூலை 4
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான விடியல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு கட்சி அலுவலகத்தில் நடந்தது
மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் மத்திய மாவட்ட தலைவர் விஜய குமார் மாநில துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வருகிற 14 ம் தேதி திருச்சி உழவர் சந்தை திடலில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது
மாநாட்டுக்கு தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அண்ணாமலை, ஓ பன்னீர் செல்வம், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் பாரிவேந்தர், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.