அரியலூர், ஜூலை:18
அரியலூர் மாவட்டம் செந்துறை செயல்பட்டு வரும் பாரத் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை அலுவலகத்தில் இயங்கி வரும் ஏடிஎம் இயந்திரம் இதில் மூன்று இயந்திரங்கள் இயங்கி வருகிறது. இரண்டு மாதங்களாக ரூபாய் நோட்டு போடும் இயந்திரமும் (டெபாசிட்), ரூபாய் நோட்டு எடுக்கும் இயந்திரமும் செயலிழந்து உள்ளது. டெபாசிட் இயந்திரம் ரூபாய் நோட்டு போடலாம் எடுக்கலாம் இது மட்டும் இயங்குகிறது. அதுவும் சில நேரங்களில் செயலிழந்து காணப்படும். மேலும் தற்பொழுது பொதுமக்கள் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வரும் வேளையில் அன்றாடம் ரூபாய் நோட்டு எடுக்கும் சூழலிலும் , திமுக அரசின் மகளிர் கொடுமை தொகை எடுக்கும் சூழலிலும், பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வி செலவுக்கு ரூபாய் நோட்டு எடுக்கும் சூழலிலும், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ரூபாய் நோட்டு எடுக்கும் சூழலிலும் ஏடிஎம் எந்திரத்தை நோக்கி வரும் போது ஏமாற்றமடைந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் மன உளைச்சல் ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது. எனவே எஸ் பி ஐ இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுது நீக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் நடவடிக்கை இல்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்