ஈரோடு டிச.21 ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது சாத்தனூர் அணையில் இருந்து அரசு முன் அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்துவிட்டதாக இபிஎஸ் தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். தண்ணீர் திறப்பு குறித்து அரசு 5 முறை எச்சரித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, செம்பரம்பாக்கத்தில் இருந்து பொதுமக்களுக்கு முன் தகவல் இல்லாமல் தண்ணீர் விடப்பட்டது. அப்போது எந்த அமைச்சரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவில்லை. அவர்களுக்கு தன்னார்வலர்கள் மட்டுமே உதவினார்கள். அ.தி.மு.க ஆட்சியின் தவறால் சென்னையில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆனால், பெஞ்சல் புயலில், அரசு மிகவும் உஷாராக இருந்தது. நானே புயல் நிவாரண மையங்களுக்குச் சென்று தினமும் நிலைமையைக் கண்காணித்தேன். அதனால், இழப்பு மிகவும் குறைவாக இருந்தது. வெள்ள நிவாரண நடவடிக்கையாக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு சென்று மக்களுக்கு உதவினேன். ஆனால், அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சட்டமன்றத்தில், இபிஎஸ் டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினையில் தனது குரலை உயர்த்தினார், ஆனால் ஏற்கனவே இந்த திட்டத்தை அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது. ”நான் முதல்வராக இருக்கும் வரை திட்டம் வராது” என சட்டசபையில் தெளிவாக கூறிவிட்டேன். ஆனால் இபிஎஸ் அந்த விஷயத்திலும் தொடர்ந்து பொய் பேசி வருகிறார்.
எனக்கு எதிராக புறத்த குறளில் பொய் குற்றச்சாட்டுகளை கூறும் எடப்பாடி பழனிச்சாமி கீச்சு குரல் இல்லாது மத்திய அரசை கண்டித்ததுண்டா வெற்று குடம் தான் அதிக சத்தம் போடும் அது போன்ற போன்றது தான் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
அவர் வகிக்கும் பதவிக்கு இது நல்லதல்ல. சட்டசபை விவாதத்திற்கு பின், பார்லிமென்டில், சுரங்கத்தை ஏலம் விடுவதற்கான மசோதாவுக்கு, அ.தி.மு.க., ஆதரவு அளித்தது தெரிய வந்தது எதிர்கட்சி ஆக்கபூர்வமான முறையில் செயல்பட வேண்டும். ஆனால் இங்கு அவர் அரசின் பல நல்ல திட்டங்களையும், செயல்பாடுகளையும் ஜீரணிக்கவில்லை. நல்லாட்சியால் தான் மக்கள் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்தனர். திராவிட கழக ஆட்சிக்கு தொடர்ந்து வெற்றி யை கொடுக்கும் நடுங்கள் எப்போதும் போல’எங்களுக்கு மேலும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.