நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பரதர் தெற்கு பொதுக்குழு கூட்டமானது நேற்று காலை புனித சவேரியார் பேராலய பரதர் அரங்கில் வைத்து நடைபெற்றது.
அதில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுக்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு அதிகப்படியான உறுப்பினர்கள் பழைய நிர்வாகமே தொடரட்டும் என்ற நிலையில் அதிகப்படியான பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது அடுத்து தலைவராக ஜஸ்டின், செயலாளராக எம் ராஜன், பொருளாளராக ஜேசுராஜ் ஆகியோர் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் சேர்த்து உறுப்பினர்கள் என மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.