திண்டுக்கல் முருகபவனம் அருகே கே.கே. நகரில் உள்ள புனித லசால் புதுமனம் ஐடிஐ தொழில்நுட்ப கண்காட்சி 2025 நிகழ்ச்சி புனித லசால் புதுமனம் ஐடிஐ உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் அரசு ஐடிஐ முதல்வர் D.ஜெயரட்சக ராஜராஜன் கலந்து கொண்டு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு
அருட்சகோதரர் கிறிஸ்டோபர்
முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஐடிஐ மாணவர்கள் தங்களது திறமைகளை திட்ட மாதிரிகள், பவர் பாயிண்ட் விளக்கக் காட்சி மற்றும் வினாடி – வினா மூலமாக வெளிப்படுத்தினார்கள். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்து ஊக்கவிக்கப்பட்டனர். இதில் புனித லசால் புதுமனம் ஐடிஐ ஆசிரியர்கள், ஆசிரியைர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.