ஆரல்வாய்மொழி, ஜன.15:
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர் பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் தேவாலய 5-ம் திருவிழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 14-ம் தேதி இரவு ஆலயத்தின் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்று இறை வழிபாடு செய்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், திருவிழாவை முன்னிட்டும் இத்தேவாலய பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் அவர்களிடம் ஆசி பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பேரவை தலைவர் கண்ணையாசெல்வம், செயலாளர் ரதீஷ், துணைச் செயலாளர் சர்மிளா, பொருளாளர் சுதாகர், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி, பேரூர் கழகச் செயலாளர் சீனிவாசன், இரவிபுதூர் ஊராட்சிக் கழகப் பொறுப்பாளர் செல்லம்பிள்ளை, கிளைக் கழகச் செயலாளர் வன்னியம்பிள்ளை, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வெங்கடேஷ், துணைத்தலைவர் முத்து, மருங்கூர் தினேஷ், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.