வேலூர்_11
வேலூர் மாவட்டம் , வேலூர். விருதம்பட்டில் ஸ்ரீ விஷ்ணு சினிமாஸ் 39-ம் ஆண்டு விழா முன்னிட்டு
உதவும் கருணை உள்ளம் அறக்கட்டளை
வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை
ஸ்கடர் நினைவு மருத்துவமனை எஸ்.எம். ஹெச் இராணிப்பேட்டை மற்றும் )
ரோட்டரி கிளப்ஆப் வேலூர் இனைந்து நடத்திய
மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், பல், தோல், மூட்டுவலி, பொதுமருத்துவம் மற்றும் இரத்ததான முகாம் ஸ்ரீ விஷ்ணு சினிமாஸ் உரிமையாளர்கள்
கார்த்திகேயன் ,டில்லி,திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள்
ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர்.டி.சிவகுமார்,
வேலூர் சிஎம்சி மருத்துவமனை டாக்டர்டாலிடேனியல்,
டாக்டர் நிவேதா மகேஷ் ,ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி இரத்த தானம் முகாமினை துவக்கி வைத்தனர். உடன் ஜெயகரன் ஐசக் ,வி.வி. மகேஷ் குமார்,பாமக பிரமுகர் துளசிராமன், ரங்காபுரம் சரவணன், நோபல் லிவிங்ஸ்டன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு அளவு கண்டறிதல், கண்புரை ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்..