சென்னை, ஐயப்பன்தாங்கலை அடுத்த பெரிய கொளத்துவாஞ்சேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு
ஸ்ரீ ஜெய யோக வீர பக்த ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து, விநாயகப் பெருமான்
மகா அபிஷேக அலங்காரமும் 11.30 மணிக்கு ஸ்ரீ யோக வீரபக்த ஆஞ்சநேயர் மகா திருமஞ்சன அலங்காரமும் மகாதீப ஆராதனையும், ஆச்சார்ய் உத்ஸவம், எஜமானர் உத்ஸவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், ஐயப்பன் தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெமிலா பாண்டுரங்கன், மாங்காடு T-14 காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜிஎன் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் வி.என்.தேவதாஸ் மற்றும் ஆலய நிர்வாகிகள், விஜிஎன் பணியாளர்கள் உட்பட பெரிய கொளத்துவாஞ்சேரி கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.