மானாமதுரை ஜீன் 10
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குவளையில் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஊர்க்காவல சுவாமி இக்கோயிலானது இவ்வூரில் சுமார் ஐந்து தலைமுறைகள் கடந்து தற்போது வரை பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறது என்று ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து வழிபாடு செய்யும் ஊர்க்காவலன் கோயில் பங்காளிகளின் ஏற்பாட்டில் கடந்த 2006 ம் ஆண்டில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அதே போல் இந்த ஆண்டில் பங்காளிகள் ஒன்றினைந்து கோயிலுக்கு புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த 22/05/24 அன்று கிராம பொதுமக்கள் ஒன்றினைந்து பந்தல் கால் நடப்பட்டு அனைவரும் மஞ்சள் காப்பு கட்டி சுவாமி வழிபாடு பூஜைகள் செய்து வந்தனர்.
விழாவை தொடர்ந்து கீழவெள்ளூர் ஸ்ரீ ஸ்ரீ மணிகண்ட சுவாமிகள் குழுவினரால் 7/6/24 அன்று முதல் காலம் மங்கள இசையுடன் தீர்த்த பூஜை கும்ப அலங்காரம் செய்யப்பட்டு விக்னேஸ்வர பூஜை மகாலட்சுமி பூஜை மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் காலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூன்றாம் காலம் மங்கல இசை முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நான்காம் காலம் மங்கல இசையுடன் ஸ்ரீ ஹரித்ர கணபதி பூஜை சங்கல்பம் புண்யாகவாசனம் ஜெப பாராயணம் கோமாதா பூஜை மூல மந்திர ஜெபகோமம் காயத்ரி ஹோமம் மகாபூர்ணா தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டு
கடம் புறப்பாடாகி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் பக்தர்கள் கோஷத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவருக்கும் ஶ்ரீ மஹா கணபதி ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இவ்விழாவில் ஊர்க்காவல சாமி கும்பிடும் பங்காளிகள் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் விழா தொடக்கத்திலிருந்து மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றம் சார்பில் நாடகங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
இதனை காண குவளைவேலி கிராம மக்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏறாளமானோர் வருகை புரிந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
இதற்கான விழா ஏற்பாடுகளை ஊர்க்காவலன் கோயில் சுவாமி வழிபாடு பங்காளிகளின் சிறப்பாக செய்திருந்தனர்.