கிருஷ்ணகிரி ஆக 29:
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள வன்னியர் தெருவில் ஸ்ரீதர் லட்சுமண சமேத கோதண்டராம சாமி ஆலயத்தின் ஸ்ரீ கோகுலாஷ்டமி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கோகுலாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு காலை விநாயகர் பூஜையும் கணபதி ஹோமம், வாசுதேவஹோமம், சுதர்சன ஹோமம், மகாபூர்ணகுதி உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணசுவாமிக்கு பால் அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் ஏராளமான கிருஷ்ண பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மதியம் ஒரு மணி அளவில் 300க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை ஸ்ரீ கிருஷ்ணரின் உற்சவ வீதியுலா நடைபெற்று விழா நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியை விழா குழுவினர்களான ஊர்கவுண்டர் கருப்பண்ணன், சின்னகவுண்டர் சண்முகம், கணக்குப்பிள்ளை கோவிந்தன், மந்திரிகவுண்டர் ராஜா, கோல்காரர் பெரியசாமி, பூசாரி சென்றாயன், உள்ளிட்ட சுப்பிரமணி, பாலகிருஷ்ணன், பலராமன், ராஜா, தருமன், வாசுசீனிவாசன், எம்.சங்கர், பெரியசாமி, ஸ்தாபித்தர் விஜி, பிரகாஷ், பாஸ்கர், பாலகிருஷ்ணன், பிரவீன்குமார், நவீன் குமார், பிரசன்னா, உள்ளிட்டவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.