கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் உள்ள 114 ஆண்டு பழமை வாய்ந்த ஶ்ரீ பத்திரகாளியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா நடப்பது வழக்கம். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெறும் இத்திருவிழாவில் இன்று நடைபெறும் பரனை ஏறுதல் நிகழ்ச்சி மிகவும் பிரச்சித்தம் பெற்றது. இக்கோவில் வளாகத்தில் ஐந்து இடங்களில் அமைக்கப்பட்ட பரனையில் பன்றிகள் மற்றும் ஆடுகளை கட்டி வைத்து, அருள் பெற்ற பூசாரி ஆவேசத்துடன் வந்து பரனைகள் மீது ஏரி ஆடு மற்றும் பன்றிகளின் மார்புகளை கத்தியால் கிழித்து அதனுள் பூஜிக்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் பழங்களை கொட்டி இரத்தத்துடன் எடுத்து பொது மக்கள் மீது வீசுவார். கீழே மடியேந்தி காத்திருக்கும் பெண்கள் ரத்தத்துடன் கூடிய வழைபழங்களை பிடித்து சாப்பிடுவதன் மூலம் குடும்பம் விருக்தி அடையும் எனவும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.
முன்தாக பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வழிபட்டனர். பக்தர்களுக்கு சாமியார் சாட்டை அடி நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து பக்தர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேறியது பொருட்டு கோவில் முன் பக்தர்கள் ஆடுகள், மற்றும் பன்றிகளை பலியிட்டனர். இதில், 1000க்கும் மேற்பட்ட ஆடுகளும், 500க்கும் மேற்பட்ட பன்றிகளும் பலியிட்டனர். வெட்டிய ஆடு, கோழி, பன்றிகளை கோவிலுக்கு வந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அங்கேயே சமைத்து விருந்து வைத்து உபசரித்தனர்.
இந்நிகழ்வினை கா கர்நாடகா, ஆந்திரா மாநிலம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், போச்சம்பள்ளி, புலியூர், அரசப்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் நாகரசம்பட்டி, மற்றும் பாரூர் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.