சென்னை ஆழ்வார் பேட்டை அருகே
பீமண்ணன் பேட்டை அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி உடையவர் தேவஸ்தானம் ஸ்ரீ மார்க்கண்டேய சுவாமி
மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழாவில்
ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் ஸ்ரீ ஸ்ரீனிவாஸப்பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ மார்க்கண்டேயர், நூதன ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கோதண்டராம ஸ்வாமி உடையவர் கும்பாபிஷேகம் ஆலய தர்மகர்த்தா நந்தம் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனை அபிஷேகம் தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டிரஸ்டிகள் உபயதாரர்களுக்கு மரியாதை செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சீனிவாசன் மற்றும் ஆலய திருப்பணிக் குழு உறுப்பினர்கள் உற்சவ கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.