சென்னை ஆலப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா
சென்னை ஆலப்பாக்கத்தில் கங்கையம்மன் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இராஜகோபுரம் கட்டுவதற்கு அப்பகுதி கிராம மக்கள் ஊர் முக்கியஸ்தர்களால் தீர்மானிக்கப்பட்டது ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கோவில் அறங்காவலர் டில்லி பாபு கலந்து கொண்டு அடிக்கல்நாட்டி கோபுர கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் இந்த பணிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த
விழாவில் ஆலப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.