மதுரை ஜனவரி 18,
மதுரை மாவட்டம் வீராதனூர் பகுதியில் காவல் தெய்வமாக அமைந்திருக்கும் ஸ்ரீ கழுங்கு முனியாண்டி கோயில் ஏழாம் ஆண்டு அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் கழுங்கு முருகன் தலைமை தாங்கினார் மற்றும்
விழா கமிட்டியினர் பாஸ்கர், முத்துப்பாண்டி, கண்ணன்,குமார், பெருமாள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த கோவிலில் 30 கிடா வெட்டி விழாவில் 2000 பேருக்கு ஆட்டு கறி அன்னதானம் அளிக்கப்பட்டது. இதில் அந்த ஊரைச் சுற்றி உள்ள 18 பட்டி கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அன்னதான விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.