குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கசுவாமி சமேத சிவகாமியம்பாள் திருக்கோவிலில் நேற்று புரட்டாசி மாதமாஹாளய அம்மாவாசை கிரிவல தேரில் சந்திரசேகர் அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிரிவலத்தேர் 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையோட்டிசிறப்பு அபிஷேகம், ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறையாசி பெற்றனர்.கிரிவலதேரின் சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார் கைலாஷ் பட்டர் மேற்கொண்டார்.இந்த அபிஷேக ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் ஓம் நமசிவாய என பக்தி பரவச கோஷமிட்டனர்.