ஆம்பூர், மே.28-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது.
இன்று ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர் திருவிழா நடந்தது. காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. துத்திப்பட்டு மெயின்ரோடு, கன்றாம்பள்ளி மெயின் ரோடு என்று பல்வேறு வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது.
காலையில் துவங்கிய தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், மாதனூர் மத்திய ஒன்றிய செயலாளர் எம்.டி.சீனிவாசன், மாதனூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் என்ஜீனியர் வெங்கடேசன், ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சுவீதா கணேஷ், டில்லிபாபு, சுரேஷ்பாபு, தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.