திண்டுக்கல் மே:24
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் கூட்டுறவு நகரில் உள்ள வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகாடமி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் சங்கத்தின் தலைவராக எ.வி.முகமது சுல்தான், துணைத்தலைவர்களாக எஸ்.கார்த்திகேயன், எ.சீனிவாசன், ஆர்.ஆனந்தன், பொதுச்செயலாளராக மனிதநேய வி.ஞானகுரு, உதவி செயலாளராக எஸ்.சேசுராஜ், பொருளாளராக வெ.ராஜகோபால் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் பொதுச் செயலாளர் மனிதநேய
வி.ஞானகுரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு போதிய வசதி உள்ள விளையாட்டுமைதானம் இல்லை. கல்லுாரி, பள்ளிகளை நாட வேண்டியுள்ளது. தேசிய மாநில கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. திண்டுக்கல்லில் அனைத்து வசதிகளுடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம் தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்து, அமைக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
கிராமபுறங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் செயற்கை பூல் ஹாக்கி மைதானம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது. தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் என பொதுச்செயலாளராக மனிதநேய ஞானகுரு தெரிவித்தார்.