தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
சாதிக் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரம், செப்.13-
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியில் செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட மாநில அளவில் விளையாட இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு மற்றும் 10ம் 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடந்தது. மேலும் பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ட்ரம் உருளை வடிவ பாத்திரம் வழங்கப்பட்டது. பள்ளியில் நிகழ்ச்சி தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகியும் பள்ளி மேலான்மைகுழு உறுப்பினருமான சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் கலந்து கொண்டனர். சமுக ஆர்வலர்கள் செய்யது அப்துல் காதர், அபுஹாரிஸ்கரிம், பரக்கத் அலி, சமிம், மைதின் அன்சாரி , சலிம் அப்துல்லாஹ், ஹம்மாது ஆகியோர் கலந்து கொண்டனர். தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில மாவட்ட அளவில் தேர்வு பெற்ற செய்யது முகம்மது அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்கள் 24 பேருக்கு சீருடையும் பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு இரண்டு ட்ரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வழங்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் அபுஹாரிஸ் கரீம் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்நன்றி தெரிவித்தனர்.