கீழக்கரை,ஆக.13-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குருளையர் மற்றும் நீலப்பறவையினர் விளையாட்டு பிரிவு தொடங்கப்பட்டது. இவ்விழாவில்மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.இராமநாதபுரம் மாவட்ட செயலர் செல்வராஜ்,மண்டபம் பயிற்சி ஆணையர் செலஸ்டின் மகிமை ராஜ், குருளையர் மற்றும் நீலப்பறவையினர் பிரிவு பயிற்சியாளர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. துவங்கப்பட்ட அன்றே பாரத சாரண, சாரணிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒற்றைச்சாளர எண் வழங்கப்பட்டது.அப்போது திருப்புல்லாணி அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் சேதுபதி, திருப்புல்லாணி வட்டாரக்கல்வி அலுவலர்கள் உஷாராணி,ஜெயா ஆகியோர் பங்கேற்ற நிகழ்வினை பள்ளியின் தலைமையாசிரியர் முகம்மது இப்ராகிம் மற்றும் ஆசிரியர் சாபிஹா ஆகியோர் செய்திருந்தனர்.ஜமாஅத்தார்கள்,எஸ்.எம்.சி. தலைவி மற்றும் உறுப்பினர்கள், கிரிக்கெட் கிளப் உறுப்பினர்கள், இளைஞர் அமைப்பினர் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்