திருவையாறு ஒளவை மழலையர் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா!
தஞ்சாவூர் எம்.பி. முரசொலி பரிசுகள் வழங்கினார்.!!
தஞ்சாவூர். ஆகஸ்ட் 17
தஞ்சாவூர் அடுத்துள்ள திருவை யாறு ஒளவை மழலையர் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
தமிழ் ஐய்யா கல்விக்கழக மதிப்பியல் தலைவர் டாக்டர் நரேந்திரன் தலைமை வகித்தார், புலவர் கந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலியபெ ருமாள், தமிழ் ஐயா கல்விக்கழக தலைவர் முனைவர் கலைவேந்தன் முன்னிலை வசித்தனர்.
தஞ்சாவூர் எம்பி முரசொலி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி தாளாளர் கண்ணகிகலைவேந்தன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியைகள் தனலெட்சுமி, தீபா, நித்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் கோகிலா அனைவரையும் வரவேற்றார், ஆசிரியை வெர்ஜினியா நன்றி கூறினார்.