டிச. 8
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வேதாந்தா அகாடமியில் விளையாட்டு விழா.
மாணவர்களுக்கான வாலிபால் போட்டியும், மாணவிகளுக்கான துரோபால் போட்டியும் நடைபெற்றன.
இந்த விழாவில் வேதாந்தா அகாடமியின் இயக்குநர் டாக்டர் ஜீ. எஸ்.வோஹ்ரா தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்தார். ஊத்துக்குளி வேதாந்தா அகாடமியின் முதல்வர் ஜிஜேந்தர் குவார், துணைமுதல்வர் சிலம்பரசன் அவர்களும் ஊஞ்சப்பாளையம் வேதாந்தா அகாடமியின் முதல்வர் லகரி சிங், துணைமுதல்வர் சிந்துஜா அவர்களும் விழாவினை ஒருங்கிணைத்தனர், இவ்விழாவினை உடற்கல்வி ஆசிரியர்களான முத்துக்குமார், தினேஷ்குமார், மற்றும் சிவானந்தம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர், போட்டியின் நடுவராக ஜான்சன் பங்கேற்றார். வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பள்ளியின் மாணவ மாணவிகளும் ஆசிரியை ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் பாராட்டினார்கள்.