கோவை நவ: 09
தமிழ்நாடு துணை முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் ரூ 50,000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதராஜ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வடிவேல் முருகன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி அவர்கள், பொள்ளாச்சி நகர செயலாளர் இரா. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நகர துணைச் செயலாளர் தர்மராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பஞ்சலிங்கம், பொள்ளாச்சி நகர தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சைஜு, பல்லடம் ரோடு வீ. விவேக், 31-வது வார்டு சுபாஷ், பொள்ளாச்சி தகவல் அறியும் உரிமை அமைப்பு நாகஜோதி, பொள்ளாச்சி சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன், முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் முனைவர் அபு.இக்பால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும்
பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குயும் சிறப்பிக்கப்பட்டது.