கரூர், அக்.23
கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தரகம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராய புரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி கலந்து கொண்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் கீழ் அனைக்கவுண்டன்பட்டி பகுதியில் கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்தில் புதிதாக பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் அழகர், கவுன்சிலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.