சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேல நீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ்,மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு 20 ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களிடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் , மாவட்ட பிரதிநிதிகள் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்கள் ஒன்றிய ஊராட்சி கிளைப் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.