மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி புதிய நிர்வாகிகள்
மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றனர்
மேலநீலிதநல்லூர் திமுக கிழக்கு ஒன்றியத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணியினர் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பெரியதுரை தலைமையில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன்,மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சுபாஷ்சந்திரபோஸ், துணை அமைப்பாளர்கள் கோட்டைப்பாண்டி, கபாஸ்கர் ,அசோக்குமார், அழகிய நம்பி, சிங்கத்துரை மற்றும் பொறியாளர் அணி அமைப்பாளர் மனோஜ்குமார் தொண்டரணி அமைப்பாளர் பழனிவேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.